தர்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பு


தர்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பு
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடரும் வெயிலின் தாக்கத்தால் தர்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கோடை கால சீசன் முடிந்தும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பழங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் நகரில் பல இடங்களில் அக்னி நட்சத்திர காலத்தைபோல தர்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் அருகே சாலையோர பகுதியில் நாட்டு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பழ வியாபாரி சலீம் கூறியதாவது, வழக்கமாக ஜூலை மாதத்துடன் தர்பூசணி பழ விற்பனை முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.

இதனால் தர்பூசணி பழங்கள் விற்பனை ஜோராகவே நடக்கிறது. திண்டிவனத்திலிருந்து தர்பூசணி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. 1 கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்று கூறினார்.


Next Story