சேலம் பட்டாசு கிடங்கு விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
சேலம் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சேலம் மாவட்டம் எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் நேற்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியை சேர்ந்த நடேசன் (வயது 50), சதீஷ்குமார் (35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் எம்.கொல்லப்பட்டியை சேர்ந்த வசந்தா (45), மோகனா (38), மணிமேகலா (36), மகேஸ்வரி (32), பிரபாகரன் (31) மற்றும் பிருந்தா (28) ஆகிய 6 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
நிவாரணம்
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.