சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
அன்னதானப்பட்டி:-
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சிவகுமார் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று காலை நெத்திமேட்டில் உள்ள சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல்லில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார். புதிய மாவட்ட சூப்பிரண்டுக்கு சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வம், கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இளமுருகன், சின்னசாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நிர்வாக அதிகாரிகள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.