சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


சேலம் சின்னதிருப்பதி  வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம்  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

சேலம்

சேலம்,

சேலம் சின்னதிருப்பதியில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இநநிலையில், நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. தொடர்ந்து குதிரை வாகனத்தில் சாமி வலம் வரும் நிகழ்ச்சியும், அதன்பிறகு மாலை திருத்தேருக்கு சாமி எழுந்தருள செய்தலும் நடைபெற்றது. இதையடுத்து மாலை 5 மணிக்கு புரட்டாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. தேரில் வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிறகு ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோவிலை சுற்றி வலம் வந்தது. இந்த தேரோட்டத்தில் சின்னதிருப்பதி, மணக்காடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story