தர்மபுரி நகரில்ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்பூக்கள் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி


தர்மபுரி நகரில்ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்பூக்கள் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி
x

தர்மபுரி நகரில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பூக்களின் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி நகரில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பூக்களின் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆயுத பூஜை-விஜயதசமி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதேபோன்று நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வணிக நிறுவனங்கள், கடைகள், பணிமனைகள், கல்விக்கூடங்கள் மற்றும் வீடுகளில் வாழைமரம் கட்டி வண்ண, வண்ண பூக்கள் மற்றும் அலங்கார காகிதங்கள், கொடிகள் கட்டி விநாயகர், சரஸ்வதி, லட்சுமி படங்களுக்கு சிறப்பு பூஜை நடத்துவது வழக்கமாகும். இந்த பூஜையின் போது தேங்காய், பல்வேறு வகையான பழங்கள், சுண்டல், பொங்கல் மற்றும் பொரிகடலை வைத்து படையல் இட்டு வழிபடுவார்கள்.

இந்த விழாவையொட்டி தர்மபுரி நகரில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நகரின் முக்கிய வீதிகளான பென்னாகரம் ரோடு, கடைவீதி, முகமது அலி கிளப் ரோடு, சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, விவேகானந்தா டவுன்ஹால் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமப்புறங்களில் இருந்தும், நகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் நேற்று குவிந்தனர்.

பூக்கள் விலை

மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க நேற்று அதிகாலை முதல் இரவு வரை சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர். ஒரு கிலோ நாட்டு சாமந்தி ரூ.100 முதல் 250 வரையிலும், இதேபோன்று செயற்கை சாமந்தி (ஹைபிரிட்) ரூ.100 முதல் 200 வரையிலும் விற்பனையானது. மேலும் குண்டு மல்லி ரூ.500, சன்னமல்லி ரூ.600, கனகாம்பரம் ரூ.600, சாதி மல்லி ரூ.300, அரளி ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.160, சம்பங்கி ரூ.220, செண்டுமல்லி ரூ.40 முதல் 100 வரை விற்பனையானது.

இதேபோன்று வாழை மரங்கள், மா இலை ஆகியவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த இந்த வாழை மரங்கள் ஒரு ஜோடி ரூ.300 முதல் விற்பனையானது. மேலும் சிறு வாழை ரூ.50 முதல் 100 வரை விற்பனையானது. இதேபோன்று சாம்பல் பூசணி ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. விளைச்சல் குறைந்ததால் இந்தாண்டு சாம்பல் பூசணி விலை சற்று அதிகமாகவே இருந்தது.

பொரி, கடலை

இதேபோன்று பொரி கடலை, வெள்ளம், அவல், வாழைப்பழம், தேங்காய் மற்றும் ஆப்பிள், சாத்துக்குடி, கொய்யா, மாதுளம் பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் விற்பனையும் நடைபெற்றது. மேலும் வணிக நிறுவனங்களை அலங்கரிக்கும் அலங்கார பூக்கள் மற்றும் காகித பூக்கள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. தர்மபுரி நகரில் பூஜை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.


Next Story