தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை


தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் தங்க பத்திர விற்பனை நாளை (19-ந்தேதி) தொடங்கி, 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

தென்காசி

இந்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. ஒரு கிராம் 24 காரட் தங்க பத்திரத்தின் விலை ரூ.5,926 ஆகும். தங்க பத்திர விற்பனை நாளை (19-ந்தேதி) முதல் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. தனிநபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.50 சதவீத வட்டியும், 8 வருடங்கள் கழித்து முதிர்வடையும் அன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்கத்தின் நகல் ஆகியவற்றைக் கொண்டு தங்க பத்திரத்தினை அனைத்து தபால் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story