போலி டீ தூள் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோதனை - 50 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்
செஞ்சி பகுதியில் உள்ள மளிகை கடையில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி 50 கிலோ கலப்பட டீ தூளை பறிமுதல் செய்தார்.
சென்னை,
செஞ்சி பகுதியில் உள்ள மளிகை கடைகளில், ஒரே ஒரு அதிகாரி நடத்திய ஆய்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள மளிகை கடைகளில், பிரபலமான நிறுவனத்தின் பெயரில் போலி டீ தூள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அப்பகுதி மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பத்மநாதன், 50 கிலோ கலப்பட டீ தூள்களை பறிமுதல் செய்தார்.
ஆனால் ஒரே ஒரு அதிகாரி வந்து சோதனை செய்தது, கலப்பட பொருட்களை விற்பவர்கள் அவற்றை மறைக்க வாய்ப்பை ஏற்படுத்திவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ள பொதுமக்கள், ஒரே நேரத்தில் அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story