புனித சந்தியாகப்பர் ஆலய சப்பர பவனி
புனித சந்தியாகப்பர் ஆலய சப்பர பவனி நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா அஞ்சு கோட்டை பங்கு கல்லறை குடியிருப்பு கிராமத்தில் புனித சந்தியாகப்பர் ஆலய முதலாம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அருட் தந்தையர்கள் ஆனந்தராஜ், சந்தியாகு, செங்கோல், அருள் சேகர், டேனியல், அந்தோணி சார்லஸ் ஆகியோர் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித சந்தியாகப்பர், ஆரோக்கிய மாதா கிராம வீதிகளில் பவனியாக சென்று இறை மக்களுக்கு இறை ஆசீர் வழங்கினர். இதையொட்டி வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர். ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் தலைமையில் குஞ்சங்குளம், கல்லறை குடியிருப்பு, வெளியங்குடி கிராம இறை மக்கள் செய்திருந்தனர். அருட்தந்தையர்கள் முன்னிலையில் கொடி இறக்கம் நடைபெற்றது.