தூய யோவான் ஆலய தேர் பவனி
சுரண்டை அருகே வாடியூர் தூய யோவான் ஆலய தேர் பவனி நடந்தது.
சுரண்டை:
சுரண்டை அருகே வாடியூர் தூய யோவான் ஆலயம் 110-வது ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மறையுரை, சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 10 நாட்கள் நடந்த திருவிழாவில் நற்செய்தி பெருவிழா, அன்பியங்களின் கலை விழா, இளம்பெண்கள், குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், நற்கருணை பவனி நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை முதல் திருவிருந்து விழா, திருமுழுக்கு விழா நடந்தது. மாலை 4 மணிக்கு புனித மரியன்னை, புனித அருளப்பர், புனித மிக்கேல் அதி தூதர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் வாடியூர் பங்கில் அமைந்த வாடியூர், மரியதாய்புரம், ஆனைகுளம், அச்சங்குன்றம், குறிச்சாம்பட்டி கிளை பங்குகளை சேர்ந்த இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை வாடியூர் பங்குத்தந்தை லியோ தலைமையில், கட்டளைதாரர் தர்மகர்த்தா மற்றும் அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள், ஊர் நிர்வாகிகள் மற்றும் இறை மக்கள் இணைந்து செய்திருந்தனர்.