பாய்மர படகு போட்டி
பாய்மர படகு போட்டி
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோர்ப்பண்ணை மீனவர் கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மோர்ப்பண்ணை, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, தொண்டி புதுக்குடி, கோட்டைப்பட்டினம் புதுக்குடி வரையுள்ள கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 37 மீனவர் படகுகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. கடலுக்குள் ஐந்து மைல்கள் தூரம் எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடந்தது. மோர்ப்பண்ணை கிராம தலைவர் சிங்காரம், ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி பாலன், கவுன்சிலர் கமலக்கண்ணி, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து போட்டியினை தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்கியதும் படகுகள் காற்றை கிழித்துக் கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இப்போட்டியில் முதல் பரி சாக ரூ.40 ஆயிரம், தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த கருப்பையா ரத்தினவேல் படகும், இரண்டாம் பரிசாக ரூ. 30 ஆயிரத்தை மோர் பண்ணையைச் சேர்ந்த அண்ணாதுரை நற்குணம் சாரதி படகும், மூன்றாம் பரிசான ரூ.25 ஆயிரத்தை மோர்பண்ணையை சமயக்கண்ணன் யாழினி படகும், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரத்தை திருப்பாலைக்குடியை சேர்ந்த இளங்கோவன் டி.டி. குரூப்ஸ் படகும், 5-ம் பரிசு ரூபாய் 15.000-ஐ தொண்டி சீதாலட்சுமி ஆகியோர் படகுகள் பரிசுகளை தட்டிச் சென்றன.