ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் எம்.எல்.ஏ. குழுவினர் விசாரணை


ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் எம்.எல்.ஏ. குழுவினர் விசாரணை
x

மண்எண்ணெய் குண்டு வீசப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி வீட்டில் எம்.எல்.ஏ. குழுவினர் விசாரணை நடத்தினர்.

சேலம்

சேலம் பொன்னம்மாபேட்டை பரமக்குடி நல்லுசாமி தெருவை சேர்ந்தவர் ராஜன். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான இவருடைய வீட்டில் நேற்று முன்தினம் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

நேற்று மாலை ராஜன் வீட்டுக்கு மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சரஸ்வதி தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, சிறுபான்மை பிரிவு தலைவி டெய்சி ஆகியோர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் ராஜனுக்கு ஆறுதல் கூறியதுடன் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சரஸ்வதி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும் போது, தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. தனிப்பட்ட காரணத்துக்காக இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. ஏதோ ஒரு காரியத்துக்காக சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி அறிக்கையை கட்சி தலைமையிடத்தில் சமர்ப்பிப்போம். அதன்பிறகு தலைமை முடிவெடுக்கும். ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story