தொழில் அதிபரிடம் ரூ.75 ஆயிரம் அபேஸ்


தொழில் அதிபரிடம் ரூ.75 ஆயிரம் அபேஸ்
x

செல்போன் நிறுவன அதிகாரி பேசுவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.75 ஆயிரம் அபேஸ்; சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

ஓசூர் அடுத்த தின்னூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் தேவ் (வயது 30). இவர் ஓசூரில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் மொபைலில் தொடர்பு கொண்ட மர்மநபர், தான் புகழ்பெற்ற மொபைல் கம்பெனியில் உயர் அதிகாரியாக இருப்பதாகவும், அதில் மனோஜ் தேவுக்கு ஓசூர் பகுதி விற்பனை உரிமையை வாங்கி தருவதாகவும் கூறி பேசினார்.

அதற்காக டெபாசிட் தொகை 75 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் கூறி உள்ளார். அதை நம்பி மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு மனோஜ் தேவ், 75 ஆயிரம் ரூபாயை அனுப்பினார். அதன்பின் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்தையும் எடுக்க முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனோஜ்தேவ், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story