ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்


ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்
x

ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வந்தவாசி, போளூரில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வந்தவாசி, போளூரில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை கிளை சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் எதிரில் நடந்தது.

சங்க பொருளாளர் ஜீ.சூரியகுமார் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு, வட்ட தலைவர் ந.ராதாகிருஷ்ணன், சிறுபான்மை நலக்குழு நிர்வாகிகள் அ.அப்துல்காதர், கா.யாசர்அராபத் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கரும்புகளுடன் பங்கேற்றனர்.

ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான பணம் ரூ.9 கோடியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போளூர்

இதேபோல் போளூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். வருவாய் பங்கிடும் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாலமுருகன், உதயகுமார் செல்வம், சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story