கரும்புக்கு டன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி சத்தியமங்கலம், கோபியில்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கரும்புக்கு டன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி சத்தியமங்கலம், கோபியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
கரும்புக்கு டன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி சத்தியமங்கலம், கோபியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சத்தியமங்கலம்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் தபால் அலுவலகம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கரும்புக்கு டன் ரூ.5 ஆயிரம் வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். ஊக்கத்தொகையை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோஷங்களும் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் எஸ்.முத்துசாமி, பொருளாளர் எஸ்.வெங்கடாசலம், துணைத்தலைவர் கே.ஆர்.அருணாசலம், துணைத்தலைவர் கே.என்.சுப்பிரமணி, நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் பி.வாசுதேவன், சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சேர்ந்த கே.மாரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயலாளர் சதீஷ் ராஜ் நன்றி கூறினார்.
கோபி
இதேபோல் கோபி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் விவேகானந்தன், முத்துச்சாமி, பழனிச்சாமி, அவிநாசியப்பன், சென்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் வெங்கிடுசாமி, மாவட்ட பொருளாளர் ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.