நெல்லையில் இதுவரை ரூ.150 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்


நெல்லையில் இதுவரை ரூ.150 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2023 3:27 PM IST (Updated: 31 Dec 2023 3:33 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண தொகை வழங்கும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நெல்லை மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக மொத்தம் ரூ.220 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாக தெரிவித்தார்.

அதில் நேற்று மாலை வரை ரூ.150 கோடி நிவாரண தொகை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டதாகவும், நாளை புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால், நாளை மறுநாள் ரேஷன் அட்டைதாரர்கள் நிவாரண தொகையை பெறலாம் என்றார். மேலும் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, அந்த விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தாலும் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story