கார் விற்பனை நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


கார் விற்பனை நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பிரபல கார் விற்பனை நிறுவனத்துக்கு ரூ.10

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் வேதாசலம். இவர் நாகர்கோவிலில் உள்ள பிரபல கார் விற்பனை நிறுவனத்திடம் புதிய காருக்கு ரூ.11 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்தார். அதோடு தனது பழைய காரை விற்றுத் தர கொடுத்துள்ளார். அந்த பழைய காருக்கு ரூ.65 ஆயிரம் தருவதாக கார் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் பல நாட்களாகியும் புதிய கார் வழங்கப்படவில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை. உடனடியாக வேதாசலம் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான வேதாச்சலம் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் பிரபல கார் விற்பனை நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட வேதாச்சலத்துக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட முன் பணம் 11 ஆயிரம், பழைய காரின் விற்பனை விலை ரூ.65 ஆயிரம், நஷ்ட ஈடு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.89 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story