பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2023 12:19 PM IST (Updated: 15 Dec 2023 12:36 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விருதுநகர் மாவட்டம், பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (15-12-2023) காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிப்பட்டி கிராமம், கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) த/பெ. பொம்மு ரெட்டியார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story