2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதை கண்காணிக்கவேண்டும்- நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்


2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதை கண்காணிக்கவேண்டும்- நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்
x
தினத்தந்தி 20 May 2023 9:00 PM IST (Updated: 20 May 2023 9:00 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்கங்கள், டாஸ்மாக் மூலமாக 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதை கண்காணிக்கவேண்டும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காகவும், 2,000 ரூபாய் நோட்டுகளை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரையிலும் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததையும் தமிழக மக்கள் முழுமனதாக வரவேற்கிறார்கள். செப்டம்பர் மாதத்துக்கு பின்னரும் 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவும், விரிவாக ஆராய்ந்து துல்லியமான திட்டமிடல் படி எடுக்கப்படுகிறது. பொதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவினை நாடு முழுவதும் உள்ள மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசியல்வாதிகள் பண மோசடி மற்றும் ஊழல் செய்வதில் புதிய முறைகளை கண்டுபிடிப்பவர்கள். மூத்த அமைச்சர் ஒருவர் ஒரே ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழலில் சம்பாதித்துள்ளார்.

தி.மு.க. அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் டாஸ்மாக் மூலமாக மாற்றுவார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே இதுபோன்ற ஆதாரங்கள் மூலமாக அதிகப்படியாக வரும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் உன்னிப்பாக கவனித்து, கண்டுபிடிக்கவேண்டும் என்று நிதி அமைச்சம் அறிவுறுத்தவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story