கோவில் குளத்தில் ரூ.2 லட்சம் மீன்கள் செத்து மிதந்தன


கோவில் குளத்தில் ரூ.2 லட்சம் மீன்கள் செத்து மிதந்தன
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:23 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில், கோவில் குளத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தன. அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

திருவாரூர்

கோட்டூர்:

மன்னார்குடியில், கோவில் குளத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தன. அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

செத்து மிதந்த மீன்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒத்ததெருவில் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே குளம் உள்ளது. இந்த குளத்தை ஒருவர் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பிள்ளையார் கோவில் குளத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் சோழராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மீன்களை நகராட்சி பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

குளத்தில் கலக்கும் கழிவுநீர்

இந்த பிள்ளையார் கோவில் குளத்தின் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. குளத்தில் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் தான் மீன்கள் இறந்ததாக அந்த பகுதிகள் மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூய்மையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story