232 பேருக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்


232 பேருக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:50 AM IST (Updated: 23 Jun 2023 2:42 PM IST)
t-max-icont-min-icon

232 பேருக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூர்

தஞ்சையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 232 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

மண்டல ஆய்வு கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்றார்.

கூட்டத்திற்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் ஆதிதிராவிடர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசின் சார்பில் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தங்கு தடையில்லாமல் சென்றடையும் வகையில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் லெட்சுமிபிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தாட்கோ ஆணையர் கந்தசாமி, மத்திய தொழிற்பணி பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தஞ்சை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ மூலம் டிராக்டர்கள், பயணிகள் ஆட்டோ, சுற்றுலா வாகனங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தையல் எந்திரங்கள், வங்கி கடனுதவிகள், வீட்டுமனை பட்டாக்கள் என 232 பேருக்கு ரூ.1.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.


Next Story