வெண்ணந்தூரில்ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அளவாய்பட்டி, நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி, மாமுண்டி, பாலமேடு, நாச்சிப்பட்டி, சப்பையாபுரம், கல்கட்டானூர், மதியம்பட்டி, வெண்ணந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
அதேபோல் ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ரூ.18 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர். இதில் சுரபி ரக பருத்தி 681 மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. இதில் பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,609 முதல் அதிகபட்சமாக ரூ.9049 வரை விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி விைல உயர்ந்து விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.