விவசாயியிடம் நூதன முறையில்ரூ.1.50 லட்சம் நகை அபேஸ்


விவசாயியிடம் நூதன முறையில்ரூ.1.50 லட்சம்  நகை அபேஸ்
x

விவசாயியிடம் நூதன முறையில்ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நகையை அபேஸ் செய்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள எல்.ஆர்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 85), விவசாயி. இவர் அங்குள்ள மெயின்ரோட்டில் நின்றுகொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு மொபட்டில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பாண்டுரங்கனிடம் சென்று இப்பகுதியில் வீட்டுமனை ஏதும் விற்பனைக்கு கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். அதற்கு பாண்டுரங்கன், தனது வீட்டின் அருகில் இடம் உள்ளதாகவும், அதை பார்க்க வருமாறும் கூறியுள்ளார். அதன்படி பாண்டுரங்கனுடன் அந்த நபர் சென்று இடத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது பாண்டுரங்கன் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்த அந்த நபர், தான் நகை கடையில் வேலை செய்து வருவதாகவும், நீங்கள் அணிந்திருக்கும் மோதிரம் கே.டி.எம். அல்லது 916 மோதிரமா என்று பார்க்க அதனை கழற்றித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பாண்டுரங்கன், தான் அணிந்திருந்த 5 பவுன் எடையுள்ள மோதிரத்தை கழற்றிக் கொடுத்துள்ளார். மோதிரத்தை பெற்ற அந்த நபர், திடீரென பாண்டுரங்கனை கீழே தள்ளிவிட்டு தான் வந்த மொபட்டில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன தங்க மோதிரத்தின் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும். இதுகுறித்து பாண்டுரங்கன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் நூதன முறையில் மோதிரத்தை பறித்துச்சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story