விமான நிலையத்தில் ரூ.1.12 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்


விமான நிலையத்தில் ரூ.1.12 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.12 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இதனையடுத்து பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 3 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

ரூ.1.12 கோடி

மேலும் அவர்களின் உடலை ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர். இதில் 3 பேரும் உடலில் மறைத்து 1 கிலோ 833 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 83 ஆயிரம் ஆகும். கடந்த சில நாட்களுக்கு பிறகு மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story