ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

திருட்டு, வழிப்பறி வழக்கில் சிறையில் உள்ள ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு சோழமாதேவி நடுத்தெருவை சேர்ந்த சந்திரசேகரின் மகன் வினோத் (வயது 29). ரவுடியான இவர் திருட்டு, வழிப்பறி வழக்கில் திருவெறும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர் என்பதாலும், சிறையில் இருந்து வெளியே வந்தால் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் என்று கருதி வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரவுடி வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிவராசு நேற்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை நேற்று மாலை சிறையில் உள்ள வினோத்திடம் போலீசார் வழங்கினர்.


Next Story