அழுகிய மீன்கள் பறிமுதல்
திங்கள்சந்தை மீன் மார்க்கெட்டில் அழுகிய மீன்கள் பறிமுதல்
கன்னியாகுமரி
திங்கள்சந்தை,
திங்கள்சந்தை பேரூராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் ரசாயனம் தூவப்பட்ட மற்றும் அழுகிய மீன்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் குளச்சல் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரெவி தலைமையில் மீன்வளத்துறை ஆய்வாளர் லிபின்மேரி, மீன்வளத்துறை மேற்பார்வையாளர் ஜெபின் டோனி மற்றும் திங்கள்சந்தை பேரூராட்சி ஊழியர்கள் மீன் மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அழுகிய நிலையில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'இதுபோன்ற சோதனைகள் தொடரும். தரமற்ற மீன்களை விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
Related Tags :
Next Story