கொடைக்கானல்-பழனி இடையிலான 'ரோப்கார்' திட்டம் - பயண நேரம் 30 நிமிடங்களாக குறையும்


கொடைக்கானல்-பழனி இடையிலான ரோப்கார் திட்டம் - பயண நேரம் 30 நிமிடங்களாக குறையும்
x

பழனி மற்றும் கொடைக்கானல் இடையே மத்திய அரசு விரைவில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

திண்டுக்கல்,

தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கும் கொடைக்கானல், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடக்கால விடுமுறைகளில் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

சாலை வழியாக கொடைக்கானல் செல்ல இரண்டு பிரதான வழிகள் உள்ளன. அதில் 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட 64 கி.மீ. தூரத்தைக் கடக்க அதிகபட்சம் 3 மணி நேரம் வரை ஆகும். எனவே போக்குவரத்து சிக்கல்களை கருத்தில் கொண்டும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பழனி மற்றும் கொடைக்கானல் இடையே மத்திய அரசு விரைவில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த ரோப்கார் திட்டத்திற்கான கேபிள் வழித்தடங்களை ஒரே நேர்கோட்டில் அமைப்பதன் மூலம் பழனி-கொடைக்கானல் இடையிலான பயண தூரம் 12 கி.மீ. ஆக குறையும். அதே போல் பயண நேரமும் சுமார் 30 முதல் 40 நிமிடங்களாக குறைக்கப்படும்.

இந்த ரோப்காரின் பயண வேகம் சுமார் 15 முதல் 30 கி.மீ. வரை தான் இருக்கும் என்பதால், பயணத்தின் போது மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசித்துக் செல்ல முடியும்.பழனியில் தேக்கன் தோட்டம் பகுதியிலும், கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகிலும் ரோப்கார் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story