செங்கல்பட்டு அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்


செங்கல்பட்டு அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
x

செங்கல்பட்டு அருகே கூட்டுறவு வங்கியில் 2 மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகின்றது. நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மர்ம நபர்கள் 2 பேர் நள்ளிரவில் வங்கியின் ஜன்னல் கம்பியை எந்திரம் கொண்டு ஒவ்வொன்றாக அறுத்தனர். அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் திருட்டில் ஈடுபட்ட 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

சத்தம் கேட்ட வங்கியின் அருகே இருந்த குடியிருப்புவாசிகள் செங்கல்பட்டு தாலுகா போலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கை ரேகை நிபுணர்களை வரவழைத்து மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை வலைவீசி ளதேடி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் தப்பியது.


Next Story