போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்


போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்
x

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்துக் இடையூறு ஏற்பட்டு வருகிறது. சத்துவாச்சாரி, வள்ளலார், பெருமுகை, கோர்ட்டு அருகே சவுத் அவென்யூ சாலை, வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில்லும், அண்ணாசாலை, காட்பாடி ரோடு, பொதுமக்கள் நெருக்கடி மிகுந்த சி.எம்.சி. அருகே காந்தி ரோடு, ஆற்காடு சாலை போன்ற இடங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிகின்றன.

பல இடங்களில் மாடுகள் முட்டி பொதுமக்கள் காயம் அடைந்து உள்ளனர். சென்னையில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து வேலூரில் மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் மட்டும், தெருவில் சுற்றிய மாடுகளை அதிகாரிகள் உத்தரவின் பேரில் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனால் தொடர்ந்து கண்காணிக்காமல் விட்டதால், மீண்டும் வழக்கம் போல் மாடுகள் சுற்றி திரிகின்றன. பொதுமக்கள் நலன் கருதி மாடுகளை முழுமையாக பிடித்து, வீடுகளில் கட்டி பாதுகாக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.


Next Story