பசலிகுட்டை முருகன் கோவிலுக்கு சாலை பணிகள் தொடக்கம்
பசலிக்குட்டை முருகன் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.
திருப்பத்தூர்
பசலிக்குட்டை முருகன் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.
திருப்பத்தூார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பசலிக்குட்டை கிராமத்தில் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலைக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் தரைத்தளம், அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை போட்டு தொடக்க விழா நிகழ்ச்சி அந்தந்த கிராம பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பி.மஞ்சுளாபூபதி, ஒன்றிய கவுன்சிலர் எம்.ஜி.காந்தி தலைமை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.தசரதன், முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், கங்கிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, துரை, கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதிதிருமுருகன், துணை தலைவர் மோகன்குமார், கூட்டுறவு சங்க தலைவர் குலோத்துங்கன், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா வினோத்குமார், சீனிவாசன், ஓம் பிரகாஷ், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.