சென்னையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


சென்னையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

சென்னையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். மடிப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ராமாபுரம், வேளச்சேரி, பெருங்குடி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைபாடுகளை முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இதில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே சாலைப் பணிகளை முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.


Next Story