குண்டும், குழியுமாக காணப்படும் சாலை


குண்டும், குழியுமாக காணப்படும் சாலை
x

செம்பியன்கோமலில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

செம்பியன்கோமலில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சி செம்பியன்கோமல் முதல் உக்கடை வரை இடையேயான சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சாைல உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பொரும்பூர், கொண்டங்கி, கங்காதரபுரம், பில்லூர், ஏ‌‌.கிளியனூர், நிம்மேலி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பொருட்களை வாகனங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது அந்த சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால் சைக்கிளில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இரவில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைத்து மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story