சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்


சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்
x

சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி மற்றும் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து சாலை பாதுகாப்பு கருத்தரங்கை கல்லூரியில் நடத்தின. கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இலக்குவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், நெல்லை போக்குவரத்து போலீஸ் உதவி ஆணையர் காமேஸ்வரன், சாலை பாதுகாப்புக்குழு உதவி கோட்ட பொறியாளர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட கல்லூரி செயலரும், நெல்லை மாவட்ட பஸ் உரிமையாளர் சங்க செயலாளருமான செல்லையா பெற்றுக்கொணடு மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். டிரைவிங் ஸ்கூல் இயக்குனர் நயினா முகம்மது வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழகுனர் உரிமம் வழங்கப்பட்டது. பேராசிரியர் செல்வம் நன்றி கூறினார்.


Next Story