சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கடையநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் மக்கா அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்சுதீன், பொறுப்பாளர்கள் ஹீரா, காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக வார்டு கவுன்சிலர்கள் கண்ணன் என்ற பாலசுப்பிரமணியன், சுபா ராஜேந்திர பிரசாத், பூங்கோதை கருப்பையா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணாபுரத்தில் தொடங்கிய இந்த பேரணி கடையநல்லூர் புதிய பஸ்நிலையத்தில் முடிவு பெற்றது. போதை தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வு குறித்து பதாகைகளை ஏந்தியவாறு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஷேக் மைதீன், யாசின், பைசல் அமீர்கான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை பொறுப்பாளர் மீராசா இப்ராஹிம் நன்றி கூறினார்.