சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தென்னாங்கூர் அரசு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சந்திரசேகர் வரவேற்றார். வந்தவாசி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் ராஜகணபதி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் தி

யாகராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சாலையில் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து விளக்கினார். அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த விளக்கக் காட்சிகளுடன், ஒரு மாணவன் வீட்டில் இருந்து கல்லூரி அடையும் வரை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் குறித்தும், வாகன உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கக் கூடாத காரணம் குறித்தும் பயிற்சியாளர் ஜெகதீஸ்வரன் விளக்கினார்.

அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த கவிதை, ஓவியம் மற்றும் வாசகப்போட்டி நடத்தப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

முடிவில் சாலை பாதுகாப்பு அலகு விழுப்புரம் உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை மாணவ-மாணவிகள் ஏற்றனர்.

இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி, வந்தவாசி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மோகனவள்ளி, பெரியசாமி, சுகந்தி, மணிமுருகன் மற்றும் ரஜினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story