'தினத்தந்தி' செய்தி எதிரொலி: ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட இடத்தில் சாலை சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி: ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட இடத்தில் சாலை சீரமைப்பு
x
தினத்தந்தி 9 Sept 2023 1:00 AM IST (Updated: 9 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சிக்கல்- பாலக்குறிச்சி இடையே ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட இடத்தில் சாலை சீரமைக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சிக்கல்- பாலக்குறிச்சி இடையே ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட இடத்தில் சாலை சீரமைக்கப்பட்டது.

பாலம் கட்டும் பணி

நாகை அருகே உள்ள சிக்கல் ஊராட்சி மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து பாலக்குறிச்சி வரை செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையில் சிக்கல் விதைப்பண்ணை அருகே செல்லும் தொம்பை வாய்க்கால் பகுதியில் சாலையின் குறுக்கே சிறிய பாலம் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தது. தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டது.

அந்த பாலம் அருகே உள்ள வளைவில், பாலப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஜல்லிக்கற்களை இருபுறமும் கொட்டி வைத்திருந்தனர். இதன் காரணமாக அந்த பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

கீழே விழுந்து காயம்

மேலும் அங்கு மின்விளக்குகளும் இல்லாததால் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். சிக்கலில் இருந்து பாலக்குறிச்சி வரை உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்பவர்கள் இந்த சாலை வழியாக செல்ல வேண்டி உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலை துறையினர் சிக்கல் விதைப்பண்ணை அருகே செல்லும் தொம்பை வாய்க்கால் பகுதியில் சாலையின் இருபுறமும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு இருந்த பகுதியை சீரமைத்து தார்ச்சாலை அமைத்துள்ளனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story