மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும்


மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும்
x

தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என கலெக்டரிடம், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியை சந்தித்து ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தளி தொகுதிக்குட்பட்ட மலைக்கிராமமான மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பேல்பட்டி முதல் பிலிக்கல் வரை தார்சாலை அமைக்க வேண்டும். இங்கு தார்சாலை இல்லாததால் அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு கர்நாடக எல்லையை சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சட்டசபையில் நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, அப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறையும் அனுமதி வழங்கியுள்ளது. அந்த சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். அதேபோல பேலாளம் முதல் காடுகெம்பத்துபள்ளி, குருபட்டி முதல் வானமங்கலம் வரை 15-க்கும மேற்பட்ட கிராமங்களில் பழங்குடி, இருளர் இன மக்கள் உள்ளனர். இப்பகுதிகளில் தார்சாலைகள் அமைத்து தர வேண்டும். ஆறுப்பள்ளி முதல் கோட்டபாலம் வரை உள்ள பழுதடைந்த தார்சாலையை சீரமைக்கவும் நிதி ஒதுக்கவேண்டும் என்று கூறினார்.


Next Story