கரடு, முரடாக காட்சி அளிக்கும் நூலக சாலை
திருவாரூரில் நூலக சாலை கரடு, முரடாக காட்சி அளிப்பதால் வாசகர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
திருவாரூரில் நூலக சாலை கரடு, முரடாக காட்சி அளிப்பதால் வாசகர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நூலக சாலை
திருவாரூர்- நாகை பைபாஸ் சாலையில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை தினசரி நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக போட்டி தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அதிகமாக நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நூலகத்துக்கு செல்லும் தார்ச்சாலை மிகவும் சேதம் அடைந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது.
இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் நூலக வாசகர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சுற்றுச்சுவர் இல்லை
மேலும் நூலகத்தினை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகள் அங்கு அதிகமாக சுற்றி திரிகின்றன. மாவட்ட மைய நூலகத்தில் சுற்றுச்சுவர் அமைத்து மின் விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.