ஊத்தங்கரையில் 31-ந் தேதி கடையடைப்பு-சாலை மறியல்-வணிகர் சங்கம் அறிவிப்பு


ஊத்தங்கரையில் 31-ந் தேதி கடையடைப்பு-சாலை மறியல்-வணிகர் சங்கம் அறிவிப்பு
x

ஊத்தங்கரையில் 31-ந் தேதி கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கம் அறிவித்து உள்ளது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரையில் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து வணிகர் சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் உமாபதி, பொருளாளர் லாலா லஜபதி, ஓட்டல் சங்க தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வருகிற 31-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில், ஊத்தங்கரை நகர் பகுதியில் உயிர் பலி வாங்கும் நிலையில், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி, அனைத்து வணிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முழு கடையடைப்பு, சாலைமறியல் போராட்டம் நடத்தப்படுவதாக கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story