மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம்


மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம்
x
தினத்தந்தி 31 July 2023 2:30 AM IST (Updated: 31 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

தேவர்சோலை அருகே மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மண் அரிப்பு

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 10-வது வார்டில் பெரகல்வயல் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் பெரகல்வயல் பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரம் உள்ள சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மண் சாலையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்து உள்ளது.

இதனால் சாலை துண்டிக்கப்படும் அபாய நிலை காணப்படுகிறது. சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தடுப்புச்சுவர்

தற்போது மழைக்காலம் என்பதால் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் மழைநீர் ெபருக்கெடுத்து ஓடுவதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் ஆற்றின் கரையோரம் தடுப்புச்சுவரும் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பெரகல்வயல் பகுதிக்கு ஆற்றின் கரையோரம் வழியாக தான் செல்ல வேண்டும். இந்த வழியாக அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரவும், அவசர தேவை மற்றும் பணிகளுக்கு வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகிறோம். எனவே, சாலையில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்றனர்.


Next Story