தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்


தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x

தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சாத்தூர் அருகே உள்ள படந்தால் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாகும். அனுமன் நகர், தென்றல் நகர், வடக்கு தெரு, படந்தாலில் இருந்து தாயில்பட்டி செல்லும் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைகள் ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் பொதுமக்கள் போட்டு செல்கின்றனர். இந்த தொட்டிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் கூடுதலாக தூய்மை பணியாளர்களை நியமித்து தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story