அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்


அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
x

ராணிப்பேட்டை நகருக்குள் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகருக்குள் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை (எம்.பி.டி.ரோடு) ராணிப்பேட்டை நகரின் மைய பகுதியில் செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன. நவல்பூர் பஸ் நிறுத்தம் அருகில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் முத்துக்கடை பஸ் நிலையம், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எல்.எப்.சி. பள்ளி வழியாகவும், வேலூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் காந்தி ரோடு, எல்.எப்.சி. பள்ளி வழியாகவும் வந்து காரை கூட்ரோடு என்ற இடத்தில் எம்.பி.டி. ரோட்டில் இணைந்து செல்கின்றன.

மறு மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் எல்.எப்.சி. பள்ளி, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, முத்துக்கடை வழியாகவும், வேலூர், ஆற்காடு, ஆரணி செல்லும் வாகனங்கள் ராணிப்பேட்டை வழியாகவும் செல்கின்றன.

ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டின் மையப்பகுதியில் எம்.எப்.ரோடு குறுக்காக செல்கிறது. இந்த சந்திப்பு பகுதி மிகவும் அபாயகரமாக உள்ளது. ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அதிலும் போக்குவரத்து குறைவாக இருக்கும் இரவு நேரங்களில் கனரக வாகன ஓட்டிகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் அவ்வப்போது விபத்துக்கள் நடக்கிறது.

எனவே ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story