திண்டுக்கல்லில் பரபரப்பு - டி.வி மெக்கானிக்கை வெட்டிக் கொலை செய்தவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்...!


திண்டுக்கல்லில் பரபரப்பு - டி.வி மெக்கானிக்கை வெட்டிக் கொலை செய்தவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்...!
x

நத்தம் அருகே டிவி மெக்கானிக்கை கொலை செய்தவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் தங்கராஜா(41).டி.வி மெக்கானிக்.அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (37). இவர்கள் இருவரும் இன்று ஊரின் அருகே பேசிக்‍கொண்டிருந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜாவை தாக்கி உள்ளார். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தங்கராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதை பார்த்த கிராம மக்கள், உதயகுமாரை பிடித்து சராமரியாக தாக்கியதில் அவரும் பலத்த காயம் அடைந்தார். நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டு அருண்கபிலன் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த இரு சம்பவம் குறித்து நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் பட்டப்பகலில் டி.வி. மெக்கானிக் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரை தாக்கியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story