சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். பெருந்துறை பகுதியில் 238 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், போலீஸ்காரர் சுந்தரம் ஆகியோருக்கு வெகுமதி வழங்கப்பட்டது. இதேபோல் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ.1 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 4 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், மெய்யழகன், செந்தில்குமார் ஆகியோரையும், கருங்கல்பாளையம் பகுதியில் 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அதில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த ஈரோடு அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோரை பாராட்டியும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுமதி வழங்கினார்.