புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அணைக்கட்டில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்
அணைக்கட்டு பஸ் நிறுத்தத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா்டத்துக்கு அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் பொய்கை செல்வகுமார் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் கவாஸ்கர், ஒன்றிய தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொது செயலாளர் பூங்கா நகர் பா.காமராஜ், முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஸ்ரீதர், மேற்கு மாவட்ட செயலாளர் மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
அப்போது சுக்கான் ஏரி மற்றும் அந்தப்பகுதியில் உள்ள ஏரிகளில் மண் கடத்தப்பட்டு வருகிறது. இதை கனிமவளத் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மண் கடத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story