வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரை தாக்கிய, பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் உள்ளிட்ட கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில செயலாளர் சுப்பு தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட துணை தலைவர் முகமது புகாரி, மாவட்ட செயலாளர் செல்வகுமார், மகளிர் அணி செயலாளர் ஜாக்குலின், முன்னாள் துணைத்தலைவர் பகவதி பெருமாள், தாசில்தார் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
Related Tags :
Next Story