பத்திரப்பதிவு மூலம் தமிழக அரசுக்கு ஒரே நாளில் ரூ.168.83 கோடி வருவாய்


பத்திரப்பதிவு மூலம் தமிழக அரசுக்கு ஒரே நாளில் ரூ.168.83 கோடி வருவாய்
x
தினத்தந்தி 23 Jan 2024 4:47 PM IST (Updated: 23 Jan 2024 4:49 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலுக்கு பிறகு பதிவுத்துறையின் ஆவண பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

"தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் 31.01.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றைய தினம் மட்டும் அதாவது 22.01.2024 அன்று மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு 168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

புதிய கூட்டு மதிப்பின் அடிப்படையின் கீழ் 22.01.2024 அன்று சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூபாய் 12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.


Next Story