கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த வருவாய்த்துறையினர்


கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த வருவாய்த்துறையினர்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோரிக்கை அட்டை அணிந்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிபுரிந்தனர்.

கரூர்

பல்வேறு கோரிக்கைகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான கூடுதல் பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்திட வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீது உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

கோரிக்கை அட்டை அணிந்து பணி

அந்த வகையில் கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் வைரபெருமாள் தலைமையில் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணிபுரிந்தனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் 264 தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய உள்ளனர்.


Next Story