ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே ஜீவா சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 4 சதவீத அகவிலைப்படி நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், 70 வயது முடிவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்கிட வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி ஓய்வூதியர்கள் பயன் தரும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் பிள்ளை தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மனோகர ஜஸ்ட்ஸ், அலெக்சாண்டர், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஐவின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story