ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமை வழக்கு: ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை உளுந்தூர்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரான இவர் கடந்த 2013-ம் ஆண்டு ராணுவத்தில் பணியாற்றி கொண்டிருந்தபோது அவரது மனைவி செண்பகத்திடம் கூடுதல் வரதட்சனை கேட்டு வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கொடுமை செய்ததாக செண்பகம் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2 ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம், முருகனின் சகோதரி கம்சலா, அதே பகுதியை சேர்ந்த கல்யாணி, கண்ணையன் மற்றும் காந்திமதி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.