சிதம்பரத்தில்ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தர்ணாபல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடந்தது


சிதம்பரத்தில்ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தர்ணாபல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடந்தது
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

சிதம்பரம்,

தர்ணா

70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர் ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை உடனே அமல் படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கிய நாளில் இருந்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியர் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கை

சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லாசிரியர் வரதராஜன் தலைமை தாங்கினாா். மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்ட நிர்வாகிகள் மகாராஜன், சிற்றரசு, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், ஜீவானந்தம் ஆகியோர் சங்க கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனி, வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஜெயபாலு நன்றி கூறினார்.


Next Story